சாம்பார் இட்லி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 4 கப்

துவரம்பருப்பு - அரை கப்

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 4

மிளகாய்வற்றல் - 8

தனியா - 2 மேசைக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

புளி - ஒரு சிறிய உருண்டை

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

நெய் - 3 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உளுந்து - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி மாவைக் சின்ன சின்ன இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். மிளகாய், தனியா, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வெறும் வாணலியில் கரகரப்பாக வறுத்து சன்னமாக பொடித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை இரண்டிரண்டாகவும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம் வதக்கி, புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

புளி கொதிக்கும் போது பொடித்து வைத்துள்ள மசாலா, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

பச்சை வாடை மறைந்ததும் பருப்பை ஊற்றி சிறிது கொதிக்க விட்டு இறக்க்கவும்.

ஒரு கப்பில் 10-12 இட்லிகளைப் போட்டு அதன்மேல் சாம்பார், நெய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்புகள்: