சப்பாத்தி உப்புமா (1)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 4

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

தாளிப்பதற்கு:

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு - சிறிதளவு

நெய் - சிறிதளவு

செய்முறை:

சப்பாத்தியை மிக்ஸியில் போட்டு சிறு துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, நெய்யை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் சிவந்தவுடன் தக்காளி, பச்சை மிளகாயை போடவும்.

பிறகு பொடித்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை போட்டு வதக்கி இறக்கவும்.

குறிப்புகள்:

முதல் நாள் இரவு மீதமான சப்பாத்தியில் கூட செய்யலாம்.