சப்பாத்தி உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 3

பெரிய வெங்காயம் - 1

கேரட் துருவல் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி அல்லது காரத்துக்கு ஏற்ப

பெருங்காயத்தூள் - 1/4தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சப்பாத்தியை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கியதும் கடுகு, கடலை பருப்பு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.

வெங்காயம் , வெங்காயத்துக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் கேரட் துருவல் சேர்க்கவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயதூள் சேர்த்து 1நிமிடம் வதகவும்.

பொடித்த சப்பாத்தி சேர்த்து நன்றாக கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.

ஒரு கை தண்ணீர் தெளித்து கிளறி சூடானதும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் மேலே தூவி பறிமாறவும்.

குறிப்புகள்: