சத்து அடை (1)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
வெள்ளை சன்னா - அரை கைப்பிடியளவு
பாசிப்பருப்பு - 1/3 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை பயிறு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/3 கப்
ராஜ்மா பீன்ஸ் - அரை கைப்பிடியளவு
கடலைப்பருப்பு - 1/4 கப்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அனைத்து பருப்புகள் மற்றும் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து பின் கெட்டியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து வைத்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து பரிமாறவும்.