க்ரீன் பீஸ் மசால் தோசை
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 100 கிராம்
உருளைகிழங்கு - 1 கப்
தோசை மாவு - 1 கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3
பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடலைபருப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
உருளை. பட்டாணியை பாதி வேக வைத்துக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வாயில் தட்டுபடாத வண்ணம் பொடியாய் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிக்கவும். பின் இஞ்சி பூண்டு கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
இப்போது நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
பின் சீரகத்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
பின் மசித்த உருளை மற்றும் பாதி வெந்த பட்டாணியை சேர்த்து கால் டம்ளர் நீர் விட்டு பச்சை வாசனை போக நன்கு வேகவிடவும். கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
தோசைகல்லில் நெய்விட்டு மாவு ஊற்றி தோசை வார்க்கவும். அதன் மீது மசாலா கலவை ஒரு கரண்டி அளவு விட்டு நடுவில் மட்டும் சமமாக பரப்பவும் பின் மடித்து பரிமாறவும்.