கோதுமை ரவை மசாலா உப்புமா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

பச்சை பட்டானி - 2 தேக்கரண்டி

தக்காளி - 1

பூண்டு - 1

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்னெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்த பிறகு

வெங்காயம் (நீட்டமாக) நறுக்கி போடவும்,

அது லைட்டாக வதங்கிய பிறகு தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி பின் பச்சை பட்டாணியை சேர்க்கவும். எல்லாம் ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.

பின் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே முழுவதும் போட்டு உப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

பிறகு திறந்து வெந்துள்ளதா என்று பார்த்து மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

பூண்டு இல்லாமலும் செய்யலாம்.