கோதுமை ரவை கிச்சடி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கோப்பை

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய பச்சைமிளகாய் - 2

இஞ்சிவிழுது - 1/2 தேக்கரண்டி

பூண்டுவிழுது - 1/2 தேக்கரண்டி

காய்கறி கலவையாக - 1 கோப்பை (அல்லது) ஏதாவது ஒரு வகையான காய்

தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - ஒரு பிடி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

அடிகனமான சட்டியில் எண்ணெயை காய வைத்து சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வறுக்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கி காய்கறிகளை போட்டு வதக்கவும்.

பிறகு ரவையைக் கோட்டி நன்கு கலக்கி விடவும். அதனுடன் உப்புத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளையும் போட்டு கிளறிவிட்டு இரண்டு கோப்பை சுடு நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மூடியை போட்டு அடுப்பின் அனலை குறைத்து வேக விடவும்.

பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்கு கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: