கோதுமை ஓட்ஸ் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 3/4 கப்

ஓட்ஸ் - 1/4 (அ) 1/2 கப்

இட்லி அரிசி (அ) பச்சரிசி - 1/4 கப்

உளுந்து - 2 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஓட்ஸ், உப்பு தவிர மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தண்ணீரில் களைந்து கொள்ளவும். பின்னர் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். (அதிக தண்ணீரில் ஊறவைக்க வேண்டாம்).

ஊறவைத்தவற்றை அதிலுள்ள தண்ணீருடன் சேர்த்து கிரைண்டரில் அல்லது மிக்சியில் அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் மாவை 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து புளிக்கவிடவும்.

தவாவை சூடாக்கி மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

குறிப்புகள்:

இதில் ஆனியன் தோசை, முட்டை தோசை, மசாலா தோசை என எல்லா தோசை வகைகளும் செய்யலாம்.

ஓட்ஸ் சேர்க்காமல் கோதுமை ரவையில் மட்டும் கூட செய்யலாம். அப்படி செய்யும் போது மாவு விரைவாக (4 மணிநேரத்தில்) பொங்கி விடும்.

மேற்சொன்ன அளவில் 8 முதல் 10 தோசை வரும்.