கோதுமை இடியாப்பம்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

அரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - 2 கைப்பிடி அளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவை சுத்தமான துணியில் மூட்டையாகக் கட்டி இட்லி பானையில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்தெடுத்து கட்டிகளின்றி சலித்து ஆற வைக்கவும். (ஆறிய பிறகு டப்பாவில் கொட்டி வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்).

கோதுமை மாவுடன் அரிசி மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து கொதி நீரை விட்டு இடியாப்ப மாவு பதத்திற்கு பிசையவும்.

பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்ப தட்டிலோ அல்லது இட்லி தட்டிலோ பிழியவும்.

பிழிந்த இடியாப்பத்தை இட்லி பானையில் வைத்து 5 - 8 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய்ப் பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.