கொத்துக்கறி தோசை (1)
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - தேவையான அளவு
கொத்துக்கறி (மட்டன்) - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
இறைச்சியை கழுவி தனியே வைக்கவும்.
சோம்பு, கிராம்பு, பட்டை வறுத்து பொடி செய்யவும்.
பாத்திரத்தில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
கழுவிய இறைச்சி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
கறி வெந்ததும், வறுத்து பொடித்த சோம்பு, கிராம்பு, பட்டையை தூவி, நன்கு கிளறி இறக்கவும்.
மாவினால் தோசை ஊற்றி, மூடி வைத்து, கொத்துக்கறியை பரவலாக வைத்து பரிமாறவும்.