கைமா பரோட்டா
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 2
பெரிய வெங்காயம் - 1
குட மிளகாய் - 1
கேரட் - 1
கோஸ் - 100 கிராம்
அஜினோமோடோ (விருப்பமிருந்தால்) - 1 சிட்டிகை
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மற்ற காய்களை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
பரோட்டாவையும் சன்னமாக, நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அஜினமோட்டோ சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து நல்ல தணலில் வதக்கவும்.
பாதி வெந்தது போல் இருக்கும் போது எல்லா சாஸ் வகைகளையும் சேர்த்து கிளறவும்.
பரோட்டா, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி, சூடேறியதும் இறக்கவும்.