கேழ்வரகு அடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1/4 கிலோ

கடலை மாவு - 100 கிராம்

வேர்க்கடலை - 10 கிராம்

முருங்கைக் கீரை - 2 கொத்து

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு கொட்டைபாக்கு அளவு

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

கடலை எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைக்கவும்.

முருங்கை கீரையை உறுவி சுத்தம் செய்து வைக்கவும். வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, உடைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கேழ்வரகு மாவு, கடலை மாவு இரண்டையும் கொட்டி, தேவையான உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்.

பின்பு பிசைந்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, தேங்காய் துருவல், வேர்க்கடலை இவைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடான பின் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பிறகு ஒரு கரண்டி அளவு மாவை வைத்து தட்டி 5 நிமிடம் கழித்து திருப்பி போடவும். பின்பு 3 நிமிடம் வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: