கேழ்வரகு அடை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 2 கப்

ஆய்ந்த முருங்கை இலை - 2 கப்

வெங்காயம் - 1

காய்ந்தமிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்புத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மாவு, கீரை, சீரகம், ஆகியவற்றை ஒரு கோப்பையில் போட்டு கலந்து வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்தமிளகாயை சிறியதாக கிள்ளி இரண்டையும் மாவுக் கலவையில் சேர்க்கவும்.

பிறகு உப்புத்தூளை ஒரு கோப்பை தண்ணீரில் கரைத்து சிறிது சிறிதாக மாவு கலவையில் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.

நன்கு கெட்டியான உருண்டையாக பிசைந்துக் கொள்ளவும். மாவு தளர்ச்சியாக இருந்தால் மேலும் சிறிது மாவைச் சேர்த்து பிசைந்து பெரிய எலுமிச்சைப்பழம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அடை தட்டிய உடனே போடுவதற்கு தயாராக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காயவைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு குண்டு சட்டியை கவிழ்த்து போட்டு அதன் மீது கெட்டியான ஒரு ஈரத் துணியை போடவும். பிறகு அதன் மீது ஒரு உருண்டையை வைத்து கை விரல்களை நீரில் நனைத்துக் கொண்டு தடியான அடையாக தட்டவும்.

தட்டிய உடனே கல்லில் போடவும். எண்ணெயை ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு நன்கு சுட்டு எடுக்கவும். இதைப் போலவே எல்லா உருண்டைகளையும சுடவும்.

குறிப்புகள்:

புளிகுழம்புடனோ அல்லது கருவாட்டு குழம்புடனோ தொட்டு சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.