கேரட் தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
பச்சரிசி - 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
கேரட் (துருவியது) - 3/4
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு கெட்டியாக பொங்கப் பொங்க அரைக்கவும்.
மிளகாய் வற்றல், சீரகம், வெங்காயத்தை சிறியதாக நறுக்கவும்.
உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த பின் மிளகாய் வற்றல், சீரகம், வெங்காயம் போட்டு கலந்து ஆப்ப சோடா சேர்த்து கலக்கி ஊத்தாப்பம் போல் கனமாக இருபக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.