கேப்சிகம் இடியாப்பம்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 6

கேப்சிகம் - 1

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

முட்டை - 2

கடுகு, உளுந்து, கடலைபருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இடியாப்பத்தை ஆறவைத்து ப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரங்களுக்கு பின் உதிர்த்துவிடவும். (இப்படி செய்வதால் நன்கு உதிர்த்துவரும். ஒட்டவும் செய்யாது)

கேப்சிகம் ஒரு இஞ்ச் நீளவாக்கில் மெல்லிய அகலத்துடன் நறுக்கி வைக்கவும். விதைகள் வேண்டாம்.

எண்ணெயில் கடுகுளுந்து, கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவும்.

வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்

அதன் பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், கேப்சிகம் சேர்த்து முக்கால் பாகம் கேப்சிகம் வேகும் வரை வதக்கவும் (நீர் ஊற்ற கூடாது)

முட்டையை உடைத்தூற்றி நன்கு கிளறவும்.

பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்:

சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.