குருணை வெண் பொங்கல்
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
குருணை அரிசி (பச்சரிசி) - 1 கப்
சிறுபருப்பு - 1/4 கப்
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2
பால் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
நல்லமிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவ
செய்முறை:
குக்கரில் அரிசி குருணையும், பருப்பையும் கழுவி போட்டு அதில் சீரகம், 2 ஆக கீறிய பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு, பால் மற்றும் 2 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அது காய்ந்ததும் நல்லமிளகு, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு போட்டு நன்றாக வறுத்து பொங்கலில் கொட்டி கிளறி சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
சாம்பாருடன் பரிமாறவும்