கீமா இட்லி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி – 4 அல்லது 5

தக்காளி – 2

பெரிய வெங்காயம் – 1

காரட் – 2

பட்டாணி – ஒரு கப்

தேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - தேவைக்கேற்ப

ரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க

பச்சை கொத்தமல்லி – சிறிது

ஏலக்காய், கிராம்பு – தலா ஒன்று

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். பட்டாணியை வேக வைத்து எடுத்து வைக்கவும்.

காரட்டை, தோல் சீவி, துருவி வைக்கவும். தக்காளி, பெரிய வெங்காயம், சிறிது பச்சை கொத்தமல்லி, உப்பு, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.

வேக வைத்த இட்லியை சிறிய சதுரங்களாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்ததும் இட்லி துண்டங்களை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ஒரு நாண்ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இதிலேயே, துருவிய காரட்டையும் போட்டு, நன்றாக வதக்கவும். பிறகு வெந்த பட்டாணியையும் போட்டு நன்றாக கிளறவும்.

பொரித்து வைத்திருக்கும் இட்லித் துண்டுகளை இந்தக் கலவையில் போட்டு கிளறவும்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: