கிட்ஸ் மைதா தோசை
0
தேவையான பொருட்கள்:
மைதா - 4 தேக்கரண்டி
முட்டை - 1
கட்டி தேங்காய்ப் பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 2 பின்ச்
சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி தூவ
நெய் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 பின்ச்
செய்முறை:
முதலில் தேங்காயுடன் ஏலக்காய் பொடி கலந்து கட்டியாக 1/2 பால் எடுத்துக் கொள்ளுங்கள்..
பின்பு தேங்காய்ப்பாலில் மைதா, முட்டை, உப்பு கலந்து நன்கு கட்டியில்லாமல் சற்று தளர்வாக கலக்கி கொள்ளுங்கள்
ஒரு நான்ஸ்டிக் பேனை காய வைத்து மாவை கொஞ்சம் ஊற்றி பேனை சுழற்றி எல்லா பக்கமும் வருமாறு தோசைகளை சுடவும்
இருபுறமும் திருப்பி போட்டு வந்ததும் ஒரு தட்டில் வைத்து நெய் தடவி சிறிது சூடாறிய பின் சர்க்கரை தூவி சுருட்டி விடவும் சுருள் சுருளாக வில்லைகளை வெட்டி தட்டில் வைத்து பரிமாறவும்.