கார தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - ஒரு கப்

வர மிளகாய் - 15

பூண்டு - ஒன்று (முழுதாக)

புளி - நெல்லிகாய் அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

உளுந்து - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளை பூண்டை தோலுரித்து வெறும் வாணலியில் சிறிது நேரம் வதக்கவும்.

வர மிளகாயை கொதிக்கும் நீரில் போட்டு மூடி விட்டு அடுப்பை அணைத்து விடவும். மிளகாய் ஊறும் வரை அப்படியே இருக்கட்டும்.

பின் ஆறியதும் உப்பு மற்றும் புளி கரைசலுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து எடுத்து வைக்கவும்.

தோசைக்கல்லில் மாவை வார்த்து உடனேயே ஒரு தேக்கரண்டி சட்னியை தடவி சமமாக எல்லா இடங்களிலும் தடவவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு பின் அடுத்த பக்கம் திருப்பி வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: