கார குழிப்பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மிளகுத்தூள் - 3 அல்லது 4 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 3

மல்லி தழை, கறிவேப்பிலை - சிறிது

ரவை - 1 டம்ளர்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

மாவில் நறுக்கிய வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, மிளகுத்தூள், ரவை ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.

தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ரவை சேர்ப்பதினால் மாவு இறுக்கமாக இருக்கும்.

அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும்.

திருப்பி விட்டு சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.

குறிப்புகள்:

கார சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

ரவை சேர்ப்பதினால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்