கார அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்

பச்சரிசி - 2 டம்ளர்

கடலை பருப்பு - 3/4 டம்ளர்

துவரம் பருப்பு - 1/2 டம்ளர்

பாசி பருப்பு - 1 கைப்பிடி

சின்ன ஜவ்வரிசி - 1 கைப்பிடி

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தேங்காய் துருவல் - 1/4 மூடி

காய்ந்த மிளகாய் - 6

தனியா - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

மிளகு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

கொத்துமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு, மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மிளகு, உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.

வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், எல்லாவற்றையும் வதக்கி மாவில் கொட்டி, நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லை காய வைத்து, சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: