காய்கறி நூடுல்ஸ் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி நூடுல்ஸ் - 1/2 கிலோ பாக்கெட்
சிவப்பு வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 4
முட்டை கோஸ் - 1 கோப்பை
முளைவிட்ட பச்சைபயிறு - 1 கோப்பை
முள்ளங்கி இலை (அல்லது) தால் - 1 கோப்பை
கேரட் - 1 கோப்பை
குடைமிளகாய் - 1 கோப்பை
சோயாசாஸ் - 2 மேசைக்கரண்டி
சில்லிசாஸ் - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கோப்பை
உப்பு தூள் - தேவையான அளவு
செய்முறை:
நூடுல்ஸை பாக்கெட்டில் உள்ள விதிமுறைகளுக்கேற்ப வேகவைத்தோ அல்லது சுடு நீரில் ஊறவைத்தோ செய்து வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு மீண்டும் வடிகட்டி வைக்கவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மற்ற எல்லாக் காய்களையும் நீளவாக்கில் ஒரே அளவாக நறுக்கி வைக்கவும்.
முள்ளங்கி இலையை கழுவி பெரியதாக நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெய், வெண்ணெயை காய வைத்து முதலில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு, கீறிய பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை நீங்கியவுடன் காய்களை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு, பாதி உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ்ஸை ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு ஆற வைத்துள்ள நூடுல்ஸ்ஸை போட்டு நன்கு கிளறி விட்டு உப்புத்தூள், மிளகுத்தூளைத் தூவி விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும்.