காய்கறி அவல் உப்புமா
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
ஊறவைத்த பட்டாணி - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். அவலை சுத்தமாக கழுவி 5 நிமிடம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் வேகவைத்த காய்கறிகள், ஊறவைத்த அவல், உப்பு போட்டு நன்கு கிளறவும். கடைசியில் வேர்க்கடலை தூவி இறக்கவும்.