காஞ்சிபுரம் இட்லி (9)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 350 கிராம்
உளுந்து - 250 கிராம்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவ
கறிவேப்பிலை - 1 கொத்து
சுக்கு - 10 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியுடன் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைஸ் ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் நன்கு தட்டி பொடி செய்த சுக்கு சேர்த்து, உப்புப் போட்டு கரைத்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளிக்க வைத்த மாவை மறுநாள் எடுத்து எண்ணெய் தடவிய அல்லது வாழை இலை வைத்த ஒரு அலுமினியப் பாத்திரத்தில் பாதி அளவிற்கு ஊற்றி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேகவிட்டு இறக்கி வைக்கவும்.
மணமான காஞ்சிபுரம் இட்லி ரெடி.
குறிப்புகள்:
இதற்கு வெங்காய சட்னி அருமையான சைட் டிஷ்.