காஞ்சிபுரம் இட்லி (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்

புழுங்கரிசி - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

மிளகு - 2 தேக்கரண்டி

ஜீரகம் - 2 தேக்கரண்டி

காயப் பொடி - ஒரு தேக்கரண்டி

சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணை - 1/4 கப்

கடுகு - 1 தேக்கரண்டி

நெய் - 1/4 கப்

பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

பச்சரிசி, புழுங்கரிசி, உளுத்தம் பருப்பு, மூன்றையும் பச்சையாக மிஷினில் கொடுத்து, பாம்பே ரவை பதத்திற்குத் திரித்துக் கொள்ளவும். மாவைச் சலித்து எடுக்க வேண்டாம்.

அரைத்து வைத்த மாவை முதல் நாள் இரவு உப்பு போட்டு, தண்ணீரில் கெட்டியாகக் கலந்து வைக்கவும்.

மிளகு, ஜீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். எண்ணை அல்லது நெய்யை சுடவைத்து, எல்லா சாமான்களையும் தாளித்து மாவில் கொட்டவும்.

இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பிடித்தவர்கள், அரைத் தேக்கரண்டி ஸோடா மாவு கலக்கலாம். மிகவும் பொர பொரவென்று வரும்.

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒற்றைத் தட்டில் வாழை இலையைப் போட்டு ஒரே இட்லியாகவோ, அல்லது இரண்டாகவோ வார்க்க வேண்டும்.

கனமாக இருக்கும் என்பதால், குறைந்தது 30 நிமிடங்கள் வேகவேண்டும்.

இலை கிடைக்காதவர்கள், ஒரு பெரிய அகன்ற வட்டப் பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும்.

ஆறினாலும் ருசியாக இருக்கும். சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: