கம்பு இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 1 கப்

பச்சரிசி - 1 கப்

உளுந்து - 1 கைப்பிடி

வெந்தயம் - சிறிது

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

உப்பு தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு வெட் கிரைண்டேரில் ஊற வைத்தவற்றை போட்டு வெண்ணெய் பதத்தில் அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி பானையில் வைத்து வேக வைக்கவும்.

நன்கு வேக வைத்து இறக்கவும். சுவையான, எளிதாக செய்யக்கூடிய கம்பு இட்லி ரெடி.

குறிப்புகள்:

இதே மாவைக் கொண்டு தோசையும் வார்க்கலாம்.