கம்பு அடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 1 கப்

பச்சரிசி - 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 8

துவரம் பருப்பு - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1/4 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, கம்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தனித்தனியாக கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, கனமான அடைகளாக தட்டி, நடுவில் ஓட்டை போடவும். நடுவிலும் சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் [சிம்மில்] வைக்க வேண்டும்).

குறிப்புகள்: