கம்புமாவு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 2 கப்

இட்லி அரிசி -1 கப்

உளுந்து - 3/4 கப்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கம்பை சுத்தம் செய்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, பருப்பு, வெந்தயம் ஊறவைக்கவும்.

நன்றாக ஊறியவுடன் அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக போட்டு நன்கு அரைக்கவும்.

கம்பையும் அரைத்து அரிசிமாவுடன் உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

அடுத்தநாள் காலையில் தோசையாக வார்த்தெடுக்கவும்.

குறிப்புகள்:

சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.