உருளை சப்பாத்தி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
கோதுமை மாவு - 1 டம்ளர்
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, கட்டியில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்குடன் அதே அளவு கோதுமை மாவு, சிறிது சீரகப்பொடி சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல பிசையவும்.
நன்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். (கிழங்கு சப்பாத்தி மாவை விட அதிகமாகிவிடக் கூடாது. அப்படி அதிகமானால் கையில் ஒட்டும். மாவு கிழங்கை விட அதிகமாக இருந்தால் தவறில்லை)
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி, கோதுமை மாவில் நன்கு பிரட்டி, சப்பாத்திகளாக தட்டவும். அடுப்பில் தோசைக்கல் காய்ந்ததும் தட்டிய சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இதனை ஆலு கோபி கறியுடன் பரிமாறலாம்.