உருளைக்கிழங்கு பரோட்டா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/4 கிலோ
மைதா மாவு - 1/2 கிலோ
உருளைகிழங்கு - 1/2 கிலோ
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உளுந்து - 1 மேசைக்கரண்டி
வறுத்த வேர்கடலை - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
வத்தல் - 8
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமை,மைதா இரண்டையும் சேர்த்து உப்பு போட்டு 3மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
இந்த மாவை 4 மணி நேரம் ஊறவிடவும்.
உருளைகிழங்கை வேகவைத்து தோலை எடுத்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின் வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பொட்டுக்கடலை,வேர்கடலை இந்த இரண்டையும் தவிர மற்ற பொருட்களை வறுத்து வேர்கடலை,பொட்டுக்கடலையையும் சேர்த்து பொடி செய்யவும்.
பின் பிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக உருட்டி மெல்லிய அப்பளமாக வளர்க்கவும்.
மசித்த உருளைகிழங்கில் மசாலாப்பொடி,உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இந்த கலவையையில் சிறிது எடுத்து அப்பளத்தின் மேல் வைத்து மேலே இன்னொரு அப்பளத்தை வைத்து மூடி நன்கு அழுத்தி லேசாக தேய்த்து பேனில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.