உப்புமா (1)
தேவையான பொருட்கள்:
ரவை - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2 அல்லது 3
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ரவையை வெறும் வாணலியில் இட்டு வறுத்து, வாசனை வந்தவுடன் தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவந்து வரும்போது பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன், ரவையின் அளவில் இருமடங்கு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நீர் கொதிக்கையில் சிறிது சிறிதாக ரவையினை விட்டு நன்கு கிளறியபடி இருக்கவும். மிதமான தீயில் உப்புமாவை மூடி வேகவைத்து இறக்கவும்.
உப்புமா வெண்மை நிறத்தில் இருக்க நீர் கொதிக்கையில், சிறிது எலுமிச்சை பழச்சாறும் சேர்க்கலாம்.