இளநீர் தோசை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
இளநீர் - 1 கப் (தேங்காய் தண்ணீர் அல்லது தண்ணீரும் பயன்படுத்தலாம்)
இளநீர் வழுக்கை - 1 கப் (கிடைக்கவில்லை என்றால் தேங்காய் துருவல்)
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வார்ப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையும் 6 - 8 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை இளநீர், இளநீர் வழுக்கை சேர்த்து ஆப்பத்திற்கு அரைப்பது போல் அரைக்கவும்.
கிரைண்டரில் இருந்து மாவை எடுத்தபின் ஒரு கப் நீர் ஊற்றி கழுவி எடுக்கவும். இந்த நீரை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். இது இறுகி கூழ் போன்ற பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற விடவும்.நன்றாக ஆறியதும் அரைத்து வைத்திருக்கும் மாவுடன் கலக்கவும்.
இதனுடன் உப்பு ,சர்க்கரை, ஆப்ப சோடா, சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
தோசை தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி மாவை ரவா தோசை ஊற்றுவது போல சுற்றி விடவும்.
இருபக்கமும் வேகவைத்து சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் சுவையாக இருக்கும்.