இறால் அடை
தேவையான பொருட்கள்:
இறால் - 15
அரிசி மாவு - 1 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
ரவை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
முட்டை - 1
கறிவேப்பிலை - சிறிது
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் கறிவேப்பிலை, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாய் வற்றல், சீரகம், சோம்பு வறுத்து பொடி பண்ணவும்.
இறாலை சுத்தம் செய்து மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெறும் சட்டியில் போட்டு தீயை மிதமானதாக வைத்து வரட்டிக்கொள்ளவும்.
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வரட்டிய இறால் சேர்த்து தீயை குறைத்து வைத்து வதக்கவும். வெங்காயம் வெந்து நன்கு வதங்கியதும் பொடியை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
பின் அரிசிமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வதக்கிய வெங்காய கலவை ரவை, தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு பிசைந்து முட்டையை அடித்து ஊற்றி நன்கு கலக்கி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் பொரிக்கும் சட்டியை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் ஊற்றி ஒரு குழிக்கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி சுற்றிவர இன்னும் 1 தேக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி தீயை மிதமானதாக வைத்து சுட்டு எடுக்கவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு பொரிய விடவும்.