இனிப்பு தோசை (3)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணைய் - தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்லத்தண்ணீரில் கோதுமை மாவு, அரிசிமாவு, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலந்து அரை மணி நேரம் கழித்து தோசை வார்க்கவும்.
நெய்விட்டு தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.