இனிப்பு குழிப்பணியாரம்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு

அரிசி அவல் - 1/2 ஆழாக்கு

துருவிய வெல்லம் - 1 ஆழாக்கு

ஏலக்காய் பொடி - சிறிது

சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, அவல் இரண்டையும் தனித்தனியே 2மணிநேரம் ஊறவைக்கவும்

பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து கடைசியாக வெல்லத்தை சேர்த்து அரைத்து எடுக்கவும்

ஏலக்காய் பொடி சமையல் சோடா சேர்த்து கலக்கி கொள்ளவும்

அடுப்பில் குழிப்பணியார கல்லை வைத்து நெய் விட்டு ஊற்றி எடுக்கவும்

குறிப்புகள்: