இனிப்பு கார குழிப்பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 400 கிராம்

புழுங்கலரிசி - 400 கிராம்

உளுந்து - 100 கிராம்

வெந்தயம் - 1 மேசைக்கரண்டி

வெல்லம் - 300 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சைமிளகாய் - 4

கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு

ஏலக்காய் - 4

எண்ணெய் - 100 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசிகளை தனியாகவும், உளுந்து வெந்தயத்தை தனியாகவும் 2 மணி நேரம் ஊறப்போட வேண்டும்.

அரிசியை கொரகொரப்பாக (இட்லி மாவு பதத்திற்கு) உளுந்து வெந்தயத்தை பொங்க பொங்க அரைக்க வேண்டும்.

இரண்டையும் ஒன்றாக உப்பு சிறிது சேர்த்து கரைத்து இரண்டு பாத்திரத்தில் தனித்தனியே ஊற்றி வைக்க வேண்டும். மாவு திக்காக [கெட்டியாக] இருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெல்லத்தை தட்டி சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்கவிட்டு வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி ஒரு மாவில் ஊற்றி ஏலக்காய் தட்டிபோட்டு கரைக்க வேண்டும்.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தை பொரியவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி வதக்கி மற்றொரு மாவில் கொட்டவேண்டும்.

தேங்காயை துருவி அல்லது பல்லுபல்லாக பொடியாக நறுக்கி மாவில் போட்டு சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கரைக்கவேண்டும்.

நாண் ஸ்டிக் குழிப்பணியாரச்சட்டியில் எண்ணெயை ஒவ்வொரு குழியிலும் விட்டு, இனிப்பு மாவை கரண்டியால் எடுத்து ஊற்றி மூடி சிறு தீயில் வேகவிட்டு, வெந்தவுடன் திருப்பிபோட்டு வேகவிடவேண்டும்.

இன்னொரு மாவையும் அதே போல் ஊற்றி வேகவைக்கவேண்டும்.

குறிப்புகள்: