இனிப்பு இட்லி
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் மூடி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதல் நாள் மாலை புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு தனித்தனியாக ஊறவைத்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
காலையில் வெல்லத்தை நுணுக்கி, பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் நுணுக்கிய வெல்லத்தைப் போடவும்.
வெல்லம் நன்கு கரைந்தவுடன் இட்லி மாவில் ஊற்றவும்.
இட்லி தட்டில் மாவினை ஊற்றி, ஒவ்வொரு இட்லியின் மீதும் தேங்காய் துருவலைப் போடவும்.
ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.