இனிப்பு அவல் உப்புமா
0
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
முந்திரி பருப்பு - 10
திராட்சை - 10
நெய் - 1 குழிக்கரண்டி
துருவியதேங்காய் - 1/4 மூடி
ஏலக்கா பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:
அவலை நன்கு கழுவி ஒருகப் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் நெய் காயவைத்து முந்திரி, திராட்சை சிவக்க வறுக்கவும்.
அதன்மேல் சர்க்கரை போட்டு,கரைந்ததும் ஊறின அவல், தேங்காய்ப்பூ,ஏலப்பொடி போட்டு 5 நிமிடங்களுக்கு நன்கு கிளறி விடவும்.
பொல,பொல என்று ஆனதும் இறக்கி சூடாகப்பரிமாறவும்.