இட்லி மஞ்சூரியன் (3)
0
தேவையான பொருட்கள்:
இட்லி -5
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி
கார்ன்ஃபிளார் - தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லியை விரல் நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மைதா, கார்ன்ஃபிளார், கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கலர், சாஸ் சேர்த்து தண்ணீரி ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இட்லியை மாவு கலவையில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.
சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.