இட்லி உப்புமா
தேவையான பொருட்கள்:
இட்லி - 8
பச்சைமிளகாய் - 6
பூண்டு - 10
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
இட்லியை வேக வைத்து குளிர்சாதனப் பெட்டியில் எட்டு முதல் பத்து மணி நேரம் வைத்து விடவும். இட்லியை கையால் ரவை போல் உதிர்த்து வைத்துக் கொள்ளவும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் உதிர்ப்பதற்கு எளிதாக இருக்கும்
பச்சை மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை உதிர்த்து வைத்திருக்கும் இட்லிப் பொடியில் கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இட்லியை போட்டு மிதமான தீயில் மூடி வைத்து கிளறவும்.
இட்லி சூடானவுடன் இறக்கவும்.