இடியாப்பம் வெஜ் ரோல்
தேவையான பொருட்கள்:
வேக வைத்த இடியாப்பம் - 10
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5,
பச்சை பட்டாணி - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
பிரட் தூள் - தேவையான அளவு
புதினா - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
மைதா - 1/4 கப்
கார்ன் ஃப்ளார் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் சேர்த்து வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, புதினா, கொத்தமல்லி, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, சுருள வதக்கவும்.
ஆறியவுடன் ஒவ்வொரு இடியாப்பத்தின் மீதும், இக்கலவையை சிறிது வைத்து, பாய் போல் சுருட்டி, பக்கவாட்டிலும் மடக்கி, ரோல் செய்யவும்.
மைதா, கார்ன் ஃப்ளார் தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
செய்த ரோல்களை மாவில் நனைத்து, ப்ரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.