ஆலு பரோட்டா (2)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - கால் கிலோ
உருளை கிழங்கு - கால் கிலோ
கொத்தமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
சாட் மசாலா (அல்லது) கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவை சிறிது தளர்த்தியாக பிசைந்து வைத்துகொள்ளவும்.
உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துவைத்துகொள்ளவும்.
மசித்த கிழங்கில் சாட் மசாலா, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவில் ஒரு உருண்டை அளவுக்கு எடுத்து சிறிது கையால் அழுத்து தட்டி அதன் நடுவில் தயார் செய்துவைத்துள்ள உருளை கிழங்கை வைத்து உருட்டி திக்கான சப்பாத்திகளாக இடவும் தவாவை காயவைத்து அதில் சப்பாத்திகளை எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்