அவல் புட்டு (1)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1/4 கிலோ
சர்க்கரை - 1 டம்ளர்
தேங்காய் - 1/2 மூடி
முந்திரி - 10
ஏலக்காய் - 5
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை சுத்தம் செய்து, வெறும் வானலியில் வறுக்கவும்.
வறுத்த அவலை புட்டுக்கு போல் கரகரப்பாக உடைத்து கொள்ளவும்.
உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, அவலில் தெளித்து பிசறவும்.
கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும்.
தேங்காயை துருவி வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
அவலை ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே, சர்க்கரை, தேங்காய் துருவல், முந்திரி, நெய், ஏலக்காயை பொடி செய்து, தூவி கலந்து வைக்கவும்.