அவல் உப்புமா (9)
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் – 1/4 கிலோ
புளி – ஒரு சிறிய எலுமிச்சையளவு
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முன்னூறு மில்லி தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும். அவலை சுத்தம் செய்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயம் போடவும்.
ஒரு நிமிடம் கழித்து மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கறிவேப்பிலை உருவிப் போட்டு மஞ்சள் பொடி சேர்க்கவும்.
புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அவலை போடவும்.
மெதுவாகப் பிரட்டிக் கொடுத்து அவல் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.