அவல் உப்புமா
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
நெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் அவலை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும். (ஈரபடுத்தும் நிலையில் இருந்தாலே போதுமானது)
அவலை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பேனில் நெய் விட்டு காய்ந்தததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்து தண்ணீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த அவல் சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.