அரிசி மாவு ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புட்டு மாவு - 2 கப்

தேங்காய் துருவல் - 2 கப்

சோம்பு - 2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்,

சோம்பை வாசனை வரும் வரை வாணலியில் வறுத்து தூள் செய்யவும்.

இத்துடன் உப்பு சேர்த்து அனைத்தையும் கலந்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

ஈரத்துணியை விரித்து மாவை உருண்டை செய்து துணியில் வைத்து கையால் சப்பாத்தியாக தட்டவும்.

1/4 இன்ச் கனமுள்ள சப்பாத்தியாக தட்டி ஒரு வட்ட மூடியால் சப்பாத்தியை நல்ல ரவுண்ட் ஷேப் கொண்டு வரவும்.

சூடான தவாவில் சப்பாத்தியை மெதுவாக எடுத்துப் போடவும். சிறுதீயில் வேகச்செய்து திருப்பி போடவும். சூடாக இருக்கும் பொழுதே நெய் தடவி பரிமாறவும்.

குறிப்புகள்:

தவாவில் இருக்கும் பொழுதே சப்பாத்தியை சுற்றிலும் எண்ணெய் மற்றும் நெய் கலந்த கலவையை ஊற்றி மொறு மொறுப்பாகாவும் சுட்டு எடுக்கலாம்.

எல்லாவித வெஜ் அல்லது அல்லது நான்வெஜ் குழம்புகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்