அரிசி மாவு புட்டு
0
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 1/2 கப்
தேங்காய் பூ - 1/2 கப்
சீனி - தேவைக்கு
பதனி வட்டு (அல்லது புட்டு) - பாதி
ஏலம் - 2
செய்முறை:
முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிராக உதிர்த்து வைக்கவும்.
5 நிமிடம் கழித்து ஒரு சட்டியில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி ஸ்டீமரில் இந்த அரிசி மாவு கலவையை வைத்துமூடி போட்டு ஆவியில் வேகவிடவும். 10 நிமிடம் கழித்து வெந்ததும் இறக்கி தேங்காய் பூ,பொடித்த ஏலம், சீனி, வட்டை இடித்து போட்டு கிளறி பரிமாறவும்.
குறிப்புகள்:
இல்லைன்னா ஒரு வாழைபழம் போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்டாக இருக்கும்.