அரிசி புட்டு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 300 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
உப்புத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு எடுத்து கல்லை களைந்து நீரை வடித்து நிழலில் காய வைக்கவும். தேங்காயை பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
முதல் நாள் இரவே அரிசி மாவை ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். காலையில் மாவை எடுத்து அதில் உப்பு தண்ணீரை லேசாகத் தெளித்து பிசறி வைக்கவும்.
மாவு பக்குவத்திற்கு வந்த பிறகு ஈரத்துணியில் வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
புட்டு மாவு நன்கு வெந்ததும், எடுத்து ஒரு தட்டில் போட்டு தேங்காயைத் துருவலை மாவில் கலக்கவும்.
சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, சூடான நெய் ஆகியவற்றை நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.