அரிசி தோசை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு - 1 கப்
சுடுத்தண்ணீர் - 2 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 8
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வறுத்த பச்சரிசி மாவுயில் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி ஆப்ப மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும். அதனுடன் தேங்காய், வெங்காயம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைப் போல ஊற்றியபின் சுற்றாமல் கரண்டியால் சுற்றியே தவாவில் ஊற்றவும்.
தேங்காய் எண்ணெய் தெளித்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சுவையான அரிசிமாவு தோசை தயார்.
குறிப்புகள்:
மாவு சரியாக வறுபடாவிட்டால் தோசை வரண்டு ஒட்டிக் கொண்டு வரும். அப்படிப்பட்ட பாக்கெட் மாவுகளானால் ஒரு முறை முன்பே லேசாக வறுத்து கொள்ளவும்.
கடலைக்குழம்பு, மட்டன், சிக்கன் குழம்புகளுக்கு நல்ல பொருத்தம்.