அரிசி அடை (1)
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய், கீரை, மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.
மாவை தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக கையால் தட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.